Top 5 Library Buildings in the World
1. Admont Abbey Library (Austria)
2. Tianjin Binhai Library (China)
3. Bibliotheca Alexandrina (Egypt)
தாவரவியல் துறைப் பேராசிரியர் மேனன் அறக்கட்டளை சார்பாக கல்லூரிகளுக்கு இடையேயான கலைப் போட்டிகள் நடைபெற்றன . தூத்துக்குடி, தூய மரியன்னை தன்னாட்சி கல்லூரியில் தாவரவியல் துறைப் பேராசிரியர் மேனன் அறக்கட்டளை சார்பாக கல்லூரிகளுக்கு இடையேயான கலைப் போட்டிகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு மாணவர்கள் பங்கேற்றனர். புகைப்படம் எடுத்தல், கழிவிலிருந்து கலை, காய்கறி செதுக்குதல், விழிப்புணர்வு வாசகம், பென்சில் கலை, நிலைக்காட்சி, மௌன மொழி நாடகம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகள் மாணவர்களுக்கு படைப்பாற்றல், கலைத்திறன், புதுமையான சிந்தனையை வெளிப்படுத்த சிறந்த தளமாக அமைந்தன. நிகழ்வின் இறுதியில் முதல் பரிசை காமராஜ் தன்னாட்சி கல்லூரி வென்றது. இந்நிகழ்ச்சியானது கல்லூரி செயலர் முனைவர் அருட்சகோதரி குழந்தை தெரெஸ், முதல்வர் முனைவர் அருட்சகோதரி ஜெஸி பெர்னாண்டோ, சுயநிதிப்பிரிவு இயக்குநர், தாவரவியல் துறைத்தலைவர் முனைவர் அருட்சகோதரி ஆரோக்கிய ஜெனிசியஸ் அல்போன்ஸ் ஆகியோரின் ஆதரவோடு மிகச் சிறப்பாக தாவரவியல் துறைப் பேராசிரியர்கள், மாணவிகளால் நடத்தப்பட்டது.